Sunday, November 17, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் 13 ஐ அமுல்படுத்த வேண்டும் - ஜனாதிபதி

தேசத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் 13 ஐ அமுல்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்தார்.

13வது திருத்தம் தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல்களின் மூலம் ஒருமித்த கருத்து தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்

மேலும் எதிர்க்கட்சிகள் வெறுமனே அரசாங்கத்தை விமர்சிப்பது என்ற பாரம்பரியக் கண்ணோட்டத்தில் இருந்து விலகிச் செயற்படுவதை பாராட்டிய ஜனாதிபதி முடிவெடுப்பதில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, மிகவும் சமநிலையான மற்றும் கூட்டு அரசியல் சூழல் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார்

அவர் தனது நாடாளுமன்ற உரையில் நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து உறுப்பினர்களும் தனிப்பட்ட விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துமாறும், நாட்டின் நீண்டகால நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவுகளை கூட்டாக எடுக்க ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, விளக்கமறியலில் உள்ள கைதிகள், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய தண்டனைக் கைதிகள் என மூன்று பிரிவுகள் உள்ளதாகவும், கடைசி இரண்டு பிரிவுகள் ஜனாதிபதியின் மன்னிப்பிற்காக பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நீதி அமைச்சரின் சிபாரிசுகளின் அடிப்படையில் 11 சிறைக்கைதிகளை விடுவிக்க ஜனாதிபதியின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், 2009ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலங்களில் 90% முதல் 92% வரை படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles