களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (09) காலை 9 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
15 மணித்தியாலங்களுக்கு குறித்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி அளுத்கம, மத்துகம, அகலவத்தை, வார்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பெந்தொட்டை, பயாகல, பொம்புவல, மக்கொன, தர்காநகர் மற்றும் மொரகல்ல ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.