Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 வயது மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

15 வயது மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

தனது 15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட தந்தைக்கு இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடாகவும், 40 ஆயிரம் ரூபாவை அபராதகவும் விதித்து பலப்பிட்டி மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இச்சிறுமி பலமுறை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது தாய் வெளிநாட்டில் பணியாற்றி வருவதுடன், தந்தையின் பராமரிப்பில் அவர் இருந்துள்ளார்.

சிறுமி உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்துள்ளதுடன், குடிபோதையில் இருந்த தந்தையிடம் அறிவித்துள்ளார். அதன்போது தன்னை யாரேனும் வன்புணர்ந்திருக்கலாம் என கூறி சிறுமியை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதையடுத்து, இது குறித்து அயல் உறவினர் ஒருவரிடம் தெரிவித்து பிடிகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனால்,குற்றவாளி தந்தைக்கு இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles