Wednesday, September 17, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கான மின்சாரம் துண்டிப்பு

ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கான மின்சாரம் துண்டிப்பு

4 மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததால், கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான மின்சாரம் நேற்று (8) துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் இதுவரையில் 6 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தத் தவறியுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி நேற்று காலை மேயர் அலுவலகத்திற்கு சென்ற மின்சார சபை அதிகாரிகள் குழு மின்சாரத்தை துண்டித்தனர்.

அவர் பதவியில் இருந்தும் மேயர் இல்லத்தில் தங்கியிருந்தமையினால் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாநகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles