Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநவகமுவ சம்பவம் தொடர்பில் பிக்கு கைது

நவகமுவ சம்பவம் தொடர்பில் பிக்கு கைது

நவகமுவ – பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் விகாரைக்கு சொந்தமானது எனக் கூறப்படும் வீட்டை நடத்தி வந்த பல்லேகம சுமன என்ற பிக்கு இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசத்தில் சில பெண்களுடன் தகாத செயல்களில் ஈடுபட்டதாக பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பிக்குவை பொலிஸாருக்கு அழைத்து சாட்சியங்களை பதிவு செய்த போது கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (08) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

குறித்த பிக்கு, தாய், மகள் எனக் கூறப்படும் இரண்டு பெண்களுடன் தகாத முறையில் இருந்தபோது, பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டார்.

இதன்பின்னர், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles