பம்பலப்பிட்டியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில், கைதான மதுவரித் திணைக்களத்தின் 4 அதிகாரிகளையும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சந்தேக நபர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
