Wednesday, November 20, 2024
25.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு75 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

75 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பொன்னாலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 227 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இருந்த 8 மூடைகளில் சுமார் 227 கிலோ 915 கிராம் எடையுள்ள 105 கேரள கஞ்சா பொதிகள் இருந்தன.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 75 மில்லியன் ரூபாவாகும்.

கைது செய்யப்பட்ட நபர் 31 வயதுடைய பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேகநபர், போதைப்பொருள் மற்றும் லொறியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles