பொல்பித்திகம பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று (06) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்பித்திகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
38 வயதான சந்தேக நபர் முதுகமுவ – மாஎலிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
சந்தேக நபர் இன்று (07) மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொல்பித்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்