அடுத்த வருடம் முதல் சலுகை விலையில் முட்டை மற்றும் கோழி இறைச்சி நுகர்வோருக்கு கிடைக்கும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பேராதனை கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்திக்கான வெளிநாட்டு முதலீடுகளுக்காக இரண்டு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக mtu; தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து இரண்டு பெரிய அளவிலான முதலீட்டாளர்கள் இந்த முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.