நாட்டில் உணவுப்பொருட்கள் வீணடிக்கப்படுவதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளது.
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் புத்தி மாரம்பே உள்ளிட்ட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை நேற்று கண்டியில் வைத்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.