Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு270 பாடசாலைகளுக்கு இலவச மதிய சத்துணவு வழங்க தீர்மானம்

270 பாடசாலைகளுக்கு இலவச மதிய சத்துணவு வழங்க தீர்மானம்

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் ஊடாக முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 270 பாடசாலைகளுக்கு இலவச மதிய சத்துணவு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles