Wednesday, November 20, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஜித் ரோஹணவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

அஜித் ரோஹணவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி குறித்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு முர்து பெர்னாண்டோ, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவித நியாயமான காரணமுமின்றி தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை வலுவற்றதாக்குமாறு உத்தரவிடக் கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles