Wednesday, November 20, 2024
28.2 C
Colombo
செய்திகள்உலகம்ட்ரம்ப் மீதான 4 குற்றச்சாட்டுக்களை உறுதி செய்தது அமெரிக்க நீதிமன்றம்

ட்ரம்ப் மீதான 4 குற்றச்சாட்டுக்களை உறுதி செய்தது அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபா் தோ்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் அதிபா் டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

இந்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த அதிபா் தோ்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க ட்ரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தன்யா சுட்கன் உறுதி செய்துள்ளாா்.

அமெரிக்காவை ஏமாற்றுவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டது, தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை புதிய அதிபருக்கு வழங்குவதற்காக நடைபெற்ற அரசுப் பணிக்கு இடையூறு விளைவித்தது, அரச அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காக சதி செய்தது, அமெரிக்கா்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்காக சதி செய்தது ஆகிய 4 குற்றச்சாட்டுகளை நீதிபதி உறுதி செய்துள்ளார்.

இந்த வழக்கில் ட்ரம்ப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடந்து, வாஷிங்டனிலுள்ள கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் ட்ரம்ப் வரும் வியாழக்கிழமை நேரில் ஆஜராகவிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles