தேவையற்ற பகுதிகளில் உள்ள கால்நடை வைத்தியர்களை அவசியமான இடங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கால்நடை வைத்தியர்களின் சங்கத்தினால் விவசாய அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாரிய தேவை காணப்படாத பகுதிகளுக்கு கால்நடை வைத்தியர்கள் நியமிப்படுவதன் மூலம் தேவை காணப்படும் பகுதிகளில் அவர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேல் மாகாணத்தின் சில இடங்களுக்கு அரச கால்நடை வைத்தியர்களின் சேவை தேவையாக காணப்படவில்லை என கால்நடை வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக இவ்வாறான பகுதிகளில் இருக்கும் கால்நடை வைத்தியர்களை தேவை காணப்படும் பகுதிகளுக்கு அனுப்புமாறு விவசாய அமைச்சரினால், அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.