வவுனியாவில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை அண்மையில் பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்தவருமான நபரே இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.