Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடுவலை சம்பவம்: மூவர் கைது

கடுவலை சம்பவம்: மூவர் கைது

கடுவலை லேக் வீதி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொதடுவ நிந்த ஹேன பசிந்து சாமர மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு வழிவகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முல்லேரிய பகுதியில் வைத்து குறித்த நபரை கடத்தி சென்று அவரை தாக்கி கொலை செய்து, கடுவலை பகுதியில் அவரது சடலத்தை விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 36, 46 மற்றும் 47 வயதுடையவர்களாவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles