2023ம் ஆண்டின் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி 18.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, 2,236.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் குறைவடைந்துள்ளது.
அத்துடன், துணி ஏற்றுமதியானது 4.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, 172.4 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மாத்திரம், ஆடை ஏற்றுமதி 25.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.