Sunday, February 1, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் ஒருவர் பலி: 7 பேர் காயம்

வாகன விபத்தில் ஒருவர் பலி: 7 பேர் காயம்

வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பேபுஸ்ஸ – குருணாகல் வீதியில் துல்ஹிரிய என்ற இடத்தில் கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் எதிர்திசையில் பயணித்த சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles