Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார தொழிற்சங்கத்தினரின் போராட்டம் கைவிடப்பட்டது

சுகாதார தொழிற்சங்கத்தினரின் போராட்டம் கைவிடப்பட்டது

சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினரால் நாளைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்துரைப்பதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு கோரியே சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் நாளைய தினம் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்திருந்தது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன், இன்று காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றதை அடுத்து, தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles