Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசினொபெக் எரிபொருள் கப்பல் இன்று இலங்கைக்கு

சினொபெக் எரிபொருள் கப்பல் இன்று இலங்கைக்கு

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருளை தாங்கிய இரண்டாம் கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், சீனாவின் சினோபெக் நிறுவனத்தினால் நாட்டுக்கு முதல் கப்பலில் கொண்டு வரப்பட்ட எரிபொருள் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விற்பனையாளர்களுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதன் பின்னர் சீனாவின் சினோபெக் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மக்களுக்கான எரிபொருளை வழங்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles