நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக விரைவில் மீண்டும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதுடன், விவசாயத் தேவைகளுக்காக சமனல நீர்த்தேக்கத்திலிருந்து தென் மாகாணத்திற்கு நீர் விநியோகிப்பதால் 4 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் மின்சாரம் பெற்று 24 மணித்தியாலங்கள் நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்தால் இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 500 கோடி ரூபா நட்டம் ஏற்படும் என பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக தற்போது நிலவும் வறட்சி காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.