Monday, April 13, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிரேன் இயந்திரம் வீழ்ந்து விபத்து: 16 பேர் பலி

கிரேன் இயந்திரம் வீழ்ந்து விபத்து: 16 பேர் பலி

இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றுக்கான கட்டுமானப் பணிகளின் போது கிரேன் இயந்திரம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர்.

குறித்த பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் விபத்தில் காயமடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேலும் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போயுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles