Monday, November 18, 2024
26.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 மாவட்டங்களுக்கு தொடர் மின்வெட்டு அபாயம்

5 மாவட்டங்களுக்கு தொடர் மின்வெட்டு அபாயம்

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக நீர் திறந்துவிடப்படுமாயின் 5 மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

நான்கு அல்லது ஐந்து நாட்ளுக்கு மாத்திரமே விவசாயத்திற்கு நீர்த்தேக்கத்திலிருந்து இவ்வாறு நீர் விட முடியும்.

நீர் திறந்து விடப்படுமானால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதனிடையே மின்வெட்டு இன்றி நீர்த்தேக்கத்திலிருந்து அதிகபட்ச நீரை திறந்து விடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இரண்டு மணித்தியால மின்வெட்டை தாங்கிக்கொண்டு விவசாயத்திற்கு தேவையான நீரை விடுவிப்பது தற்போது அத்தியாவசியமான விடயம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles