இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.
இதனை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, நாளை முதல் பாண் 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.