அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 393,094 சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் 1,280,000 குடும்பங்கள் நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்து உள்ளதாகவும், அதில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.