அளுத்கம – தர்கா நகரைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (31) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அதீஷ ஹன்சன என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுவன் தனக்கு வயிற்று வலிப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளார்.
அதனையடுத்து, தாய் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதற்காக தர்கா நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், மறுநாள் சிறுவன் களுத்துறை – நாகொட போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதனையடுத்து நாகொட போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இந்த சிறுவனை நேற்று (30) காலை கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
எனினும் அவர் இன்று (31) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.