10 மில்லியன் வாக்குகளை பெற்று ரணில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஹிங்குரங்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த மாதத்துக்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து ஜனாதிபதி முழுமையாக மீட்பார்.
அத்துடன், அவர் பொருளாதாரம் மற்றும் அரசியல் தொடர்பில் தேர்ச்சி பெற்றவர்.
தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. தேர்தல் நடந்ததால் மக்கள் வரிசைகளில் காத்திருந்ததை கடந்த காலங்களில் காண முடிந்தது.
கட்சிகளை மக்கள் ஆட்சி செய்ய வேண்டும். அதனையே ரணில் எதிர்பார்க்கிறார் என்றார்.