Tuesday, December 23, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுமுதினி படகு மீண்டும் செயலிழந்தது

குமுதினி படகு மீண்டும் செயலிழந்தது

திருத்த வேலைகளின் பின்னர் நெடுந்தீவு பயணிகளுக்காக சேவையில் ஈடுபட தயாராக இருந்த குமுதினி படகானது மீண்டும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு செயலிழந்துள்ளது.

திருத்த வேலைகளின் பின்னர் குமுதினி படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு குறிக்கட்டுவான் இறங்குதுறையில் சனிக்கிழமை (29) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் நடைபெறவிருந்த நிலையிலேயே படகில் மீண்டும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த குமுதினி படகு அடிக்கடி செயலிழந்து வந்துள்ளது.

படகினை மீள செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில், படகினை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நிகழ்வு ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன் படகினை இயக்கி குறிக்கட்டுவான் இறங்குதுறைக்கு கொண்டுவரும்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு செயலிழந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles