அவசரகால கொள்முதல் முறையின் கீழ் சுமார் 160 வகையான மருந்துகளை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவற்றில் 65 மருந்துகள் புற்றுநோயாளிகளால் பயன்படுத்தப்படுகின்றன.
அவசரகால கொள்வனவு முறையின் கீழ் கொள்வனவு செய்யப்படும் மருந்துப் பொருட்களை மூன்று மாதங்களில் பெற்றுக்கொள்ள அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மருந்துப் பங்குகள் கொள்வனவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.