Tuesday, December 23, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் காயம்

முச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் காயம்

ஹக்மன – வலஸ்முல்ல வீதியில் திகன வளைவுக்கு அருகில் இன்று (27) காலை முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டியில் பயணித்த இரு பாடசாலை மாணவர்களும், இரு பெண்களும், முச்சக்கர வண்டியின் சாரதியுமே காயமடைந்தவர்கள் ஆவர்.

இவர்கள் கங்கோடாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹக்மன நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles