நேற்றைய தினத்தை விட இன்று (27) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி: நேற்றைய தினம் (26) 322.13 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 321.15 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 337.97 ரூபாவிலிருந்து 336.95 ரூபாவாக சரிந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினம் (26) 324.64 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 323.41 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 336 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக சரிந்துள்ளது.
சம்பத் வங்கி : நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமில்லாது 324 ரூபாவாக உள்ளது. எனினும் விற்பனை பெறுமதி 336 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக குறைந்துள்ளது.