Sunday, September 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேக்க ராஜா யானை சடலமாக மீட்பு

தேக்க ராஜா யானை சடலமாக மீட்பு

கல்கமுவ வனப்பகுதியில் தேக்க ராஜா என்ற யானையின் சடலம் நேற்று (26) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்ட போது பல உடல் பாகங்கள் சிதைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யானை ஒரு மாதத்திற்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிச்சூட்டினால் தேக்க ராஜாவின் இடது கால் சேதமடைந்திருந்தது.

எவ்வாறாயினும், வனஜீவராசி அதிகாரிகள் இதற்கு பல தடவைகள் சிகிச்சை அளித்தும் காயம் குணமாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் கல்கமுவ வனஜீவராசி அதிகாரிகள் சிகிச்சை வழங்கிய போதிலும் அதன் பின்னர் தேக்க ராஜா தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles