அதானி குழுமத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தைச் சேர்ந்த தவல் ஷா மற்றும் மனோஜ் தேஷ்முக் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் அதானி குழுமத்தின் எதிர்கால திட்டங்கள், பாரிய சோலார் பேனல் திட்டம் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் இலங்கையின் சுற்றுலாத் தூதுவர் சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார்.