பேலியகொட – மெனிங் சந்தையின் செயற்பாடுகள் இன்று (27) வழமை போன்று இடம்பெறுவதாக ஒருங்கிணைந்த பொருளாதார மத்திய நிலையங்கள் சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பேலியகொட மெனிங் சந்தையில் கடையடைப்பு தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் நேற்று (26) அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதுஇ மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் உட்பட 17 பேரை பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.