தனது சகோதரியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்கிரிய – திஸ்ஸோகம, போகொடளாகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், அவரது சகோதரனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் பொலிசார் பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர்.
சுமார் 04 மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் தனது சகோதரன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவரது வாக்குமூலத்தின் பிரகாரம் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி கர்ப்பமடைந்த சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.