புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், தமக்கு மாத்திரமன்றி, இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஏழு ஜனாதிபதிகளுக்கும் இருக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல என குறிப்பிட்ட ஜனாதிபதி, அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.