நுவரெலியாவில் கந்தப்பளை பகுதியில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
46 வயதுடைய கந்தப்பளை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சகோதரரின் புதல்வர்களே மது போதையில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரையும் கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.