அம்பாறை – தீகவாப்பிய பிரதான வீதியில் மாணிக்கம்மடுவ பாலத்திற்கு அருகில் பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திகவாபியவில் இருந்து எரகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளை மாணிக்கம்மதுவ பாலத்திற்கு அருகில் நிறுத்துமாறு போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்ட போதும் அவர்கள் தொடர்ந்தும் பயணித்துள்ளனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற பொலிஸார் இரு தடவைகள் வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்ட போதும் அவர்கள் தப்பி செல்ல முற்பட்ட போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.