தொழில் அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்யுமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹொரணை பிரதேசத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் இரசாயன அகற்றும் தொட்டியில் விழுந்து 5 பேர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு நேற்று (24) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொழில் ஆணையாளரும் தற்போதைய தொழில் அமைச்சின் செயலாளருமான ஆர்.ஜி.ஏ.விமலவீர, களுத்துறை மாவட்ட முன்னாள் தொழிற்சாலை பரிசோதகர் பொறியியலாளர் ஒருவருக்கு இந்தவழக்கு தொடர்பில் பொய்யான சாட்சியங்களை முன்வைக்குமாறு அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய, தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.ஜி.ஏ.விமரலவீரவை கைது செய்யுமாறு நேற்று பிடியாணை பிறப்பித்து, அதனை 7 நாட்களுக்குள் நிறைவேற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.