Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆஸ்பிரின் பயன்பாடு இடைநிறுத்தம்

உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆஸ்பிரின் பயன்பாடு இடைநிறுத்தம்

இலங்கையில் தயாரிக்கப்படும் ஆஸ்பிரின் வகையின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

குறித்த மருந்தின் பாதுகாப்பு தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கவலைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மருந்து மற்றும் அது தொடர்பில் ஏற்பட்டுள்ள கவலைகள் தொடர்பான உண்மைகளை முன்வைக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஒரு வகை ஆஸ்பிரின் மருந்தை திரும்பப் பெற முடிவெடுப்பதால் சந்தையில் ஆஸ்பிரின் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles