Monday, November 18, 2024
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டு165 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

165 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வடக்கு கடற்பரப்பில் 54 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வெத்தலகேணி வத்திராயன் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது டிங்கி படகு ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 165 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, ​​சுமார் 165 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா அடைக்கப்பட்டிருந்த 75 பொதிகளை டிங்கி படகில் இருந்து கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய முள்ளியனைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் போதைப்பொருள் மற்றும் படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles