Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி அவர் இலங்கைக்கு வரவுள்ளதுடன், அந்நாட்டு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட 24 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் விஜயத்தில் இணைந்துகொள்ளவுள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்தின் கூட்டுக் குழுவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதே யோஷிமாசா ஹயாஷியின் விஜயத்தின் நோக்கம் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகளுடன் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் இலங்கை-ஜப்பான் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles