Sunday, July 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து வர்த்தகர் ஒருவர் நேற்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில் உயிரிழந்துள்ளார்.

உடல் நலக்குறைவுக்காக மருந்து உட்கொண்டதாக கூறப்படும் இந்த நபர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles