அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (20) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.30 ரூபாவாக அதிகரித்து விற்பனை விலை 330.29 ரூபாவாக உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முறையே ரூ. 315.26 ஆகவும், ரூ. 328.92 ஆகவும் காணப்பட்டது.