Friday, August 1, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிசேரியனுக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை

சிசேரியனுக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை

தெரிவு செய்யப்பட்ட சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹெவி மார்கெயின் (Heavy Marcaine) மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்துள்ளார்.

இன்றுவரை 30,000 ஹெவி மார்கெயின் மருந்து கையிருப்பில் உள்ளதாகவும், இந்த மருந்தின் பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டதையடுத்து மேலும் 50 குப்பிகள் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த மருந்தின் விலையேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட நிலையில் குறிப்பிட்ட மருந்தை கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles