லிட்ரோ கேஸ் நிறுவனம் 1.5 பில்லியன் ரூபா தேறிய இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த தொகையை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20) திறைசேரிக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.