Sunday, July 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனத் நிஷாந்த - அஜந்த லியனகே ஆகியோரின் பயணத்தடை நீக்கம்

சனத் நிஷாந்த – அஜந்த லியனகே ஆகியோரின் பயணத்தடை நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் அஜந்த லியனகே ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நேற்று (19) தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளமையினால், அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு நேற்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை கருத்திற்கொண்ட நீதவான், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை அவர்களது வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles