Wednesday, March 25, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு11 வயது சிறுமியை வன்புணர்ந்த பிக்கு கைது

11 வயது சிறுமியை வன்புணர்ந்த பிக்கு கைது

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பிக்கு ஒருவரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது.

மச்சவாச்சி – வனமல்கொல்லாவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்து வாழ்ந்து வரும் 59 வயதுடைய பிக்குஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அம்பன்பொல நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி அப்பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 07 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.

அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தேரர் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles