நிபுணர்களின் ஆலோசகர் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்து, சுகாதார அமைச்சினால் கோரப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது என சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம குற்றஞ்சாட்டியுள்ளார்.
உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சில மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கு விசேட ஆலோசகர் குழு சில சந்தர்ப்பங்களில் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
எவ்வாறாயினும், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் சபை குழுவின் பரிந்துரைகளை மீறி, சில பதிவு செய்யப்படாத மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.