இரண்டு வேன்கள் இன்று (19) அதிகாலை நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த டொல்பின் வகை வேன் ஒன்றும் கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற சிறிய ரக வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறிய ரக வேனை ஓட்டிய சாரதி குடிபோதையில் இருந்ததாகவும், விபத்தின் பின்னர் அவர் தப்பிச் சென்றதாகவும் திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் இரண்டு வேன்களிலும் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன் இரண்டு வேன்களும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.